புனிதமான ஐயப்ப மாலையை அணியும்பொழுது உச்சரிக்க வேண்டிய மந்திரம்

41 நாள் விரதம் அனுசரித்து, தூய்மையானவர்களாக சபரிமலையை நோக்கி பயணிக்கிறார்கள் பக்தர்கள். மாலையைக் கழுத்தில் அணிந்ததும், பக்தன் இறைவனுடன் ஒன்றுகிறார். ஆகவே விரதத்தின் தூய்மை மிகவும் இன்றியமையாததாகும்.
சூரியக் கடவுள் முக்தியை நோக்கி நகரத் துவங்கும் மலையாள மாதம் வ்ரிஸ்சிகத்தின் முதல் நாளன்று விரதம் துவங்கப்படவேண்டும். முன்னதாக யாத்திரை செல்ல நினைப்பவர்கள் அதற்கேற்ப நாட்களைத் திட்டமிட வேண்டும்.
முதல் முறை விரதம் மேற்கொள்பவர்கள் 51 நாட்களும், மூத்த யாத்திரிகர்கள் 41 நாட்களும் விரதம் கடைபிடிப்பர். விரதம் அனுசரிக்கும் அனைவருக்கும் தரிசனம் கிடைக்கும். 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு கோவிலுக்குள் அனுமதி கிடையாது.

ஐயப்பன் உருவம் பதித்த பதக்கத்துடன் மாலை அணிதல்
விரதமிருப்பதன் குறியீடாக, ஸ்வாமி ஐயப்பனின் உருவம் பதித்த பதக்கத்தை அணியவேண்டும். அதை அணிவதற்கு கோவிலிலோ, மூத்த யாத்திரிகர் ஒருவராலோ மாலை புனிதப்படுத்தப்பட வேண்டும். மாலை அணிவதற்கான சிறந்த நாட்கள் சனிக்கிழமையும், ஸ்வாமி ஐயப்பன் பிறந்த நட்சத்திரமான உத்திரமும் ஆகும்.

மாலை துளசி மாலையாகவோ, ருத்ராட்ச மாலையாகவோ இருக்கலாம். விரதம் துவங்கியபின், ஒரு நாளுக்கு இருமுறை குளித்து, ப்ரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும்.

மாலை அணிந்திருக்கும்பொழுது உச்சரிக்க வேண்டிய மந்திரம்:-
ஞான முத்ரம் ஷாஸ்த முத்ரம் குரு முத்ரம் நமாம்யஹம்
வன முத்ரம் ஷுத்த முத்ரம் ருத்ர முத்ரம் நமாம்யஹம்
ஷாந்த முத்ரம் சத்ய முத்ரம் வ்ரத முத்ரம் நமாம்யஹம்
சபர்யாஷ்ரம சத்யேன முத்ரம் பாது சடாபிமேம்
குருதக்ஷினாய பூர்வம் தஸ்யானுக்ரக கரனே
ஷரனகட முத்ரக்யாம் தன்முத்ரம் தரயாம்யஹம்
சப்ரய சல முத்ரயாயை நமஸ்துப்யம் நமோ நமஹ!
பொருள்-
ஞானத்தின் குறியீட்டிற்கும், கற்ற நூல்களுக்கும், குருநாதருக்கும், வனத்திற்கும், தூய்மைக்கு தலை வணங்குகிறேன். அமைதிக்கும், உண்மைக்கும், தவத்திற்கும் தலை வணங்கி வழிபடுகிறேன். சபரி ஆஸ்ரமத்தின் சத்தியம் இந்த குறியீட்டைக் காக்கட்டும்.

குருநாதரின் பரிபூரண ஆசிகளையும் அருளையும் பெற்றபின், இறைவனே, உன் அடைக்கலத்தை நாடி சரணடைந்திருக்கிறேன். சிறந்த ஞானனும், வானவர்கள் மற்றும் ஆன்மீகத்தூய்மைக்கு பணிகிறேன். சபரிமலையே உன் பாதங்களில் மீண்டும் மீண்டும் பணிகிறேன்.

விரதத்திற்குத் தடை ஏற்பட்டால்
41 நாட்கள் விரதம் கடைபிடிக்காமல் யாத்திரை செல்லக்கூடாது. ஏதேனும் காரணத்தினால் தடை ஏற்பட்டால், மறுபடியும் முதலிலிருந்து எந்த தடையுமின்றி 41 நாட்கள் விரதம் கடைபிடிக்க வேண்டும். யாத்திரிகர் அசுத்தமடைந்தால், மன்னிப்பு கோரி பஞ்சகவ்யத்தால் தூய்மை பெற்று, 101 முறை ஐயப்ப நாமம் ஜபிக்க வேண்டும்.

குருதட்சணை
அதிக முறை யாத்திரை வந்த ஒரு ஸ்வாமி குழுத்தலைமையாகவும், குருவாகவும் ஏற்றுக்கொள்ளப்படுவார். யாத்திரைக்கான இருமுடியை கட்டி, அந்த புனித மூட்டையை குருவே அளிப்பார்.

குருசாமிக்கு தட்சணையை, எட்டு நிகழ்வுகளில் கொடுக்கலாம். அவை பின்வருமாறு:-
மாலை அணியும் போதும், இருமுடியை வாங்கும் முன்னரும், எருமேலியில் சடங்குமுறை நடனமான பேட்டைத்துள்ளலை ஆடுவதற்கு முன்னரும், காட்டுப் பயணத்திற்கு முன்பும், புனிதப்படுத்தி, அழுதா ஆற்றில் கல்லெறியும் போதும், பம்பை ஆற்றில் குளித்து, முன்னோருக்கு நெய்வேத்தியம் அளித்த பிறகு இருமுடி தரும்பொழுதும், தரிசனத்திற்குப் பின் இருமுடியை களையும்போதும், யாத்திரை முடிந்து மாலையை களையும் பொழுதும் கொடுக்கலாம்.

நெய்வேத்தியங்கள்—
தேங்காயில் எடுத்துச் செல்லும் நெய் ஸ்வாமியின் நெய் அபிஷேகத்திற்கானது. (ஸ்வாமியை நெய்யால் அபிஷேகம் செய்தல்)
விபூதி, பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர், நீர் ஆகியவை அபிஷேக திரவங்களாகும். (அஷ்டாபிஷேகம்)
சந்தனமும் பன்னீரும் கலபாபிஷேகத்திற்குப் பயன்படும்
தாமரை, மல்லிகை, துளசி, மஞ்சள் சாமந்தி, அரளி மற்றும் கூவளம் புஷ்பாபிஷேகத்திற்குப் பயன்படுகிறது.

வெடி வழிபாடு
இதற்கான முகப்பு பெரிய கூரையின் தொடக்கத்தின் வலதுபுறத்தில் அமைந்துள்ளது. மல்லிகாபுரம் கோயில், கோயில் கோபுரம், சபரி பீடம் மற்றும் கரிமலை நடைபாதைகள் ஆகிய இடங்களுக்கு அருகிலும் முகப்புகள் அமைந்துள்ளன.

இலவச உணவு (அன்னதானம்)
கோவில் சுற்றத்தில் ஐந்து இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மல்லிகாபுரம் கோவிலின் அருகே தேவஸ்வம் போர்டால் நடத்தப்படுகிற அன்னதானக் கூடம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் 5000 பேருக்கு சோறு, சாம்பார், அவியல் உள்ளிட்ட மதிய உணவு வழங்கப்படுகிறது. உப்புமா, மதிய உணவு, கஞ்சி உள்ளிட்ட உணவு வகைகளில் நாளைக்கு மூன்று வேளை அய்யப்பா சேவா சங்கம் வழங்குகிறது. காலை பத்து மணி முதல் இரவு வரை போதநாதா அறக்கட்டளையால் மருத்துவ குணம் வாய்ந்த கஞ்சி வழங்கப்படுகிறது. பரோபகாரா மற்றும் அக்ஷயா அறக்கட்டளைகளும் கூட அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி பெற்றுள்ளன. பம்பை தேவஸ்வம், ஐயப்பா சேவா சங்கம், பம்பை விக்னேஷ்வர சத்யாலயா சமிதி உள்ளிட்ட அமைப்புகள் பம்பையில் இலவச உணவு வழங்குகின்றன.

மாலையை களைதல்
யாத்திரை முடிந்து மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைய வேண்டும்அல்லது குருவால் கட்டிவிடப்பட்ட இடத்தில் இருமுடியை இறக்கி வைத்து புனித யாத்திரைக்கு பிறகு வீடு வந்து சேர்ந்த பிறகு மாலையை கழற்றலாம். யாத்திரைக்கு சென்றவர்கள் வீடு திரும்பும் வேளையில் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். வீட்டுற்குள் நுழையும் பொழுது கடவுளின் பெயரை உச்சரிக்க வேண்டும்.இருமுடியை இறக்கும் போது மலைக்கு சென்று வந்த பக்தர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். ஐயப்பன் படத்திற்கு அருகிலோ சிலைக்கு அருகிலோ மாலையை கழற்றி வைக்க வேண்டும்.

“அபூர்வ மசல ரோஹ
திவ்ய தர்ஷன காரண
சாஷ்திர முத்ரத்வக தேவ
தேஹிமே விரத மோட்சணம்”
இருமுடி தயாரிப்பது எப்படி?
இருமுடி உருவாக்க நெய், கருப்பு வேட்டி, கருப்பு துண்டு, சூடம், அரிசி, அரிசி மாவு, அரசி துகள், பொறித்த அரிசி, மஞ்சள் பொடி, ஊதி பத்தி, உலர்ந்த திராட்சை, பட்டு, வெற்றிலை, பாக்கு, பன்னீர், பஞ்சு, நாணயங்கள், வெள்ளை துண்டு, போர்வை, அப்பளம் மற்றும் கயிறு ஆகியவை தேவைப்படும்.

இருமுடியின் முன்புறம் உள்ள பொருட்கள் மல்லிகாபுர கோவிலிலும், கடவுள் ஐயப்பன் கோவிலில் செலுத்த வேண்டிய பொருட்கள் இருக்கும். பின்புறம் இருப்பது ஆன்மீகத்தையும், பின்புறம் இருப்பது யாத்திரிகருக்கு தேவைப்படும் பொருட்கள்.
எரியூட்டப்பட்ட விளக்கின் முன் இருமுடியை குருசாமி கட்டிவிடுவார். அதற்கு பிறகு தேங்காயில் ஓட்டையிட்டு, தண்ணீரை வெளியேற்றிய பின்னர் நெய்யை இட்டு நிரப்பி, ஈரமான அப்பளத்தால் பக்தர்கள் கடவுளின் பெயரை ஜெபித்துக் கொண்டிருக்கும் போது ஒரு மூடியால் மூடிவிடுவார்.

நாணயங்கள், பாக்கு உள்ளிட்டவற்றை வெற்றிலையோடு சேர்த்து கயிற்றால் கட்ட வேண்டும். நெய் நிரப்பப்பட்ட தேங்காயை முதலில் வைத்து வெற்றிலை கட்டை வைத்து கட்ட வேண்டும். இது இறைவன் ஐயப்பனின் சீடரான கொச்சுக்கடுத்த ஸ்வாமியின் அருளுக்கான நெய்வேத்தியமாகும். இருமுடி நிரப்பப்படும்பொழுது, மூன்று கைப்பிடி அரிசி எடுத்தி இருமுடிக்கட்டில் இடுவார் யாத்திரிகர். இருமுடியின் இருபாகங்களும் தனித்தனியாக கட்டப்பட்டு, இரண்டையும் இணைத்து பொதுவாக ஒரு கயிறு கட்டப்படும்.

மூத்த யாத்திரிகர்களுக்கு குருதட்சணை கொடுக்கப்படவேண்டும் (வெற்றிலை, பாக்கு மற்றும் நாணயம்). இடுப்பைச் சுற்றி கருப்பு துணி அணிந்து, போர்வையை தலையில் வைத்து இருமுடியை அதன் மீது வைத்து வெள்ளைத் துணியால் மூட வேண்டும். குருதட்சணையை கொடுத்து சபரிமலை யாத்திரையை பக்தியுடன் துவங்க வேண்டும்.