ஐயப்ப பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய புனித கடமைகள்

தர்ம சாஸ்தா சபரிமலையின் தெய்வமாவார். ஐய்யப்ப ஸ்வாமி, தர்ம சாஸ்தாவாக விளங்குவதாக ஐதீகம். ஸ்வாமி ஐயப்பன், துன்பங்களை அழிக்கும் தெய்வமாக தனது பக்தர்களால் வழிபடப்படுகிறார்.

41 நாட்கள் விரதத்திற்கு பிறகு மட்டுமே சபரிமலை யாத்திரையை மேற்கொள்ளவேண்டும். முதன்முறை செல்பவர்களும், மூத்த யாத்திகர்களும் விரதத்தை அனுசரிக்க வேண்டும். சமீபத்தில் சொல்லப்பட்ட ஜோதிட நெறிப்படி, மாதாந்திர பூஜைகளுக்கு, கோவிலில் வேலையிலிருக்கும் ஊழியர்களும், மூலவரை தரிசிக்க வரும் பக்தர்களும் கூட விரதத்தை அனுசரிக்குமாறு வலியுறுத்துகிறது.

சூரியக் கடவுள், முக்தியின் பாதையை நோக்கி நகரும் மலையாள மாதம் வ்ரிஸ்சிகத்தின் முதல் நாள் யாத்திரைக்கான விரதத்தை துவங்க வேண்டும். விரதத்தின் ஒரு பகுதியாக, சூரிய உதயத்திற்கு முன் ஸ்நானம் செய்து, ஐயப்பனின் உருவம் பதித்த பதக்கத்துடன் இருக்கும் மாலையை அணிந்து, எளிமையுடன் விரதம் அனுசரிக்க வேண்டும். ஐயப்ப யாத்திரிகர், ப்ரம்மச்சரியம் காத்து, சைவ உணவு உண்டு, சவரம் செய்யாமல் இருக்க வேண்டும்.

ஐயப்ப மாலையை அணிந்த பிறகு, யாத்திரிகர் கடவுளாகவே கருதப்படுவார். மூலஸ்தானத்திற்கு செல்லும் 18 படிகளும் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இறைவனுக்கு சமர்ப்பிக்க, நெய் நிரப்பிய தேங்காய்களுடன் மற்ற பொருட்களை இரு பாகங்கள் கொண்ட இருமுடியை யாத்திரிகர் கொண்டு செல்ல வேண்டும்.
அந்த பதினெட்டு படிகளில் ஏறும்போதும், மூலவரை நோக்கி செல்லும்போதும், ஒருவர் மற்றவரை அவசரமாக இடித்துத் தள்ளுதல் கூடாது. மிகுந்த ஒழுங்குடன் இறைவனை தரிசிக்க வேண்டும். தரிசனமும் சரியான ஒழுங்கில் நடைபெறும். தென்மேற்கு மூலையில் உள்ள கணேசனையும், நாகக் கடவுளான நாகராஜாவுவையும், மல்லிகாபுரத்தம்மனையும் முதலில் வணங்க வேண்டும். தரிசனத்திற்கு பிறகு, தெய்வச் சிலையின் மீது, நெய்யை ஊற்றுவது மிகவும் முக்கியமானதாகும். பிற்பகலுக்குப் பின் இதைச் செய்யக்கூடாது.

ஒவ்வொரு ப்ரார்த்தனையும் ஒவ்வொரு வகை காணிக்கையைக் கொண்டது. அதிகாலையில் (நிர்மல்யம்) முந்தைய நாள் அபிஷேகத்தின் சுவடு போகுமாறு, ஸ்வாமி சிலையை எட்டு புனித திரவங்களால் (அஷ்டாபிஷேகம்) அபிஷேகம் செய்யவேண்டும். நெய்வேத்தியமாக, திரிமதுரம் (மூன்று வகை இனிப்புகள்), இடித்துப்பிழிந்த பாயாசம் (தேங்காய்ப்பாலில் அரிசி மாவு மற்றும் வெல்லம் சேர்ந்தது), அரவன ( ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் அரிசி சாதம் மற்றும் வெல்லம் கொண்டு செய்யப்படும் பிரசாதம்) மற்றும் தண்ணீர்.

கோவில் யாத்திரைக்கு செல்லும் ஒருவர், விதிகளையும், சடங்குகளையும் சரியாக கடைபிடிக்க வேண்டும். ஐயப்பன் ப்ரம்மச்சரிய கடவுளாக இருப்பதால், 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படமாட்டார்கள். பந்தள ராஜனின் குடும்ப உறுப்பினர்கள், பதினெட்டு படிகள் ஏறும்பொழுது இருமுடி சுமந்து செல்லத் தேவையில்லை. ராஜனின் முன்னிலையில், மகரவிளக்கு (யாத்திரையின் இறுதி வழிபாடு) முடிவதைக் குறிக்கும் வகையில் சந்தனக் காப்பு அணிவிக்கப்படும்.

பதினெட்டு படிகளின் மீதுள்ள விமானத்தில் மகரவிளக்கு பூஜைக்கு வரும் தந்த்ரியை, தலைமைப் பூசாரி கால்களைக் கழுவி வரவேற்பார்.
மண்டலபூஜையும், மகரவிளக்கும் மிக முக்கிய சடங்குகளாகும். மண்டலபூஜை, மலையாள மாதம் தனுவில் 11 ஆம் நாள் நடக்கும். மண்டல வழிபாட்டு நாளன்று, பந்தள ராஜன் அளித்த தங்க நகைகளால் ஸ்வாமி சிலை அலங்கரிக்கப்படும்.
குளிர்காலம் முடிவதைக் குறிக்கும் மகர சங்கராந்தி நாளன்று மகரவிளக்கு நடைபெறும். சிறப்பு வழிபாட்டிற்கு அப்பாற்பட்டு, சூரிய அஸ்தமனத்தின் போது, புனித தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட இறை சிலையை கோவில் முழுவதும் விளக்குகள் ஏற்றி வழிபடுவர் (தீபாராதனை).தீபாராதனை பூஜையின்போது இறைவனுக்கு அணிவிக்கப்படும் ஆடை ஆபரணங்கள், சிறப்பான சடங்குமுறையுடன் பந்தள மாளிகையிலிருந்து கொண்டு வரப்படும்.

மகரவிளக்கு நாளுக்குப் பிறகு, தொடர்ந்து மூன்று நாட்கள் மல்லிகாபுரத்தம்மனை வெளியே கொண்டு வருவார்கள். மலையாள மாதம் மீடத்தின் முதல் நாளன்று, அரிசியின் முதல் அறுவடை (நிறப்புத்தரி) வழங்கும் விஷ்ணு தரிசனம், கோவிலின் புனிதமான நாட்களில் ஒன்றாகும்.சித்திரா ஆட்ட திருநாள் மற்றும் பங்குனி உத்திரம் (ஸ்வாமி ஐயப்பனின் பிறந்தநாள்) ஆகியவையும் முக்கிய நாட்களாகும்.மலையாள மாதம் மீனத்தின் பங்குனி உத்திர நாள், இறைவனின் பிறந்த நாளாகவும், கோவிலின் வருடாந்திர திருவிழாவின் இறுதி நாளாகவும், பத்தாவது நாளாகவும் இருக்கிறது.